» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை ஓட்டம்
செவ்வாய் 14, ஜனவரி 2025 9:37:43 AM (IST)
உடன்குடியில் புதிதாக அமைக்கப்படும் அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் இரு அலகுகளை கொண்ட 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது துறைமுகம் அமைக்கும் பணிகள் சுமார் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளது. அனல்மின்நிலைய வளாகத்தினுள் கட்டிடங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அனல்மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிம்னியில் இருந்து புகை வெளியேறி வருகிறது. எனவே, தற்போது அனல்மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதில், அனல்மின் நிலையத்தி் மின் உற்பத்தி ஏதும் செய்யப்படவில்லை. சிம்னியில் இருந்து சரியான முறையில் புகை வெளியேறுகிறதா? என ஆய்வு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.