» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா
புதன் 15, ஜனவரி 2025 9:58:57 AM (IST)
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பொங்கல் விழாவை காலர்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு, காவல் அலுவலகம் முன்பு கோலம் இட்டு கரும்புகள் வாழை, மா, இலை தோரணமிட்டு மற்றும் அலங்கார தோரணங்களுடன் காவல் நிலையத்தை அலங்கரித்து இருந்தனர். காவலர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து பொங்கல் பானையில் பச்சரிசி வெல்லம் முந்திரி ஏலக்காய் உள்ளிட்டவற்றை கொண்டு பொங்கல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி பழங்கள் பொங்கல் பனங்கிழங்கு கரும்பு உள்ளிட்டவற்றை படைத்து தீபாரதனை காட்டி அனைவரும் வழிபட்டு மகிழ்ந்தனர். பின் ஆண்களுக்கான பெண்களுக்கான என இரு பிரிவினருக்கும் கயிறு இழுத்தல் போட்டி பன், முறுக்கு சாப்பிடும் போட்டி வைத்து இதில் அனைத்து காவலர்களும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பொங்கல் திருவிழாவை முன்னின்று காவல்துறை துனை கண்காணிப்பாளர் அசோகன், சக்திவேல் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் முருகன், பஞ்சவர்ணம், சத்தியசீலன், சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, மற்றும் காவல் துறையை சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.