» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அடுத்தடுத்து விபத்து : 2 வாலிபர்கள் பரிதாப சாவு
புதன் 15, ஜனவரி 2025 12:01:03 PM (IST)
தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி பிரைண்ட்நகர் 5வது தெருவில் வசிப்பவர் முருகன் மகன் கோவிந்த கிருஷ்ணன் (29). இவர் தூத்துக்குடி மதுரை ரோட்டில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். புது பாண்டியபுரம் அருகே செல்லும்போது இவரது பின்னால் வந்த ஒரு கார் இவர் பைக் மீது மோதியதில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சைரஸ் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் தேனூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் ஜீவா (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி சில்வர் புரத்தில் வசிப்பவர் ஜான் பிரிட்டோ இவரது மகன் கிளின்டன் (24). இவர் தூத்துக்குடி அண்ணாநகர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.