» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூக்குப்பேரி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா
புதன் 15, ஜனவரி 2025 12:12:06 PM (IST)
மூக்குப்பேரி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் செல்வின் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை ஜூலியட் உதவி தலைமை ஆசிரியை ஜெபக்குமாரி ஜேசுவடியால் தமிழர் திருநாள் மற்றும் பொங்கலை பற்றி மாணவ மாணவிகள் மத்தியில் பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களும் ஆசிரியர்களும் இனைத்து பொங்கல் இட்டு கொண்டாடினர். இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.