» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 4பேர் கைது : 3 பைக், 5 செல்போன் பறிமுதல்!
புதன் 11, செப்டம்பர் 2024 7:44:00 PM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்தனர். 1 கிலோ 100 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சோபா ஜென்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் இன்று (11.09.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், தூத்துக்குடி 2ம்கேட் பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜ் மகன் மேத்யூ (27), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியை சேர்ந்தவர்களான பாண்டியராஜ் மகன் சுதர்சனன் (எ) சுதர்சன் (23), மாரியப்பன் மகன் பொன்செல்வம் (எ) செல்வம் (28) மற்றும் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுபாஷ் (22) ஆகியோர் என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1கிலோ 100 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.