» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகர் முழுவதும் சுகாதாரப் பணிகள்: தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வலியுறுத்தல்!

சனி 27, ஜூலை 2024 10:59:24 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் சுகாதாரப்பணிகள் முறையாக செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட செயலாளர் அ.செல்வகுமார் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள மனுவில்,"தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணிகளில் Ourland Engineering Works நிறுவனம் மெத்தனமாக செயல்படுகின்றதா? குப்பைகள் சேகரிக்கும் பணிகளை முழுமையாக கவனிக்க இயலவில்லையா?

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை மாநகராட்சி சுகாதார அலுவலரிடம் புகார் அளித்து தான் தீர்வு காண வேண்டுமெனில் Ourland Engineering Works நிர்வாகம் செயலற்ற நிலையில் உள்ளதா? சுகாதார அலுவலர் வந்து தான் பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் எனில் ஒப்பந்தம் எதற்கு? ஒப்பந்தாரர் எதற்கு? 

Ourland Engineering Works Pvt Ltd., நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதில் இருக்கும் பிரச்சனை தான் மேற்படி பிரச்சனைக்கு காரணமா? ஊழியர்களிடம் கேட்டால் பணியை மட்டும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் ஊதியத்தை அவர்கள் நினைக்கும் நேரத்தில் வழங்குவார்களா என ஆதங்கப்படுகின்றனர்.

பொதுமக்கள் நலனுக்காக தான் ஒப்பந்தம் என்பது ஒப்பந்த நிறுவனத்துக்கு புரியவில்லையா? பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் ஊதியம் செலுத்தப்பட வேண்டும் என்ற சுழலில் குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்கப்படுவது ஏன்? ஏற்கனவே ஊதியம் வழங்குதல் பிரச்சனையில் மாநகராட்சி எச்சரிக்கை செய்தும் மீண்டும் அதே தவறு நடப்பது எதனால்? இவையெல்லாம் மாநகராட்சிக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொள்கின்றதா? இது தொடர்பாக உரிய விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory