» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 107பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சனி 27, ஜூலை 2024 10:13:04 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 107பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 21.06.2024 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பட்டி சங்குகுளி காலனியைச் சேர்ந்த மாரிசெல்வம் (26) என்பவரை மேட்டுப்பட்டி மயான பகுதியில் வைத்து கொலை செய்த வழக்கில் தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மலைராஜா மகன் சந்தனராஜ் (எ) பாண்டி (21) மற்றும் சிலரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

கடந்த 21.06.2024 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி பணம் பறித்த வழக்கில் ஏரல் சிவராமமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரதுரை மகன் தண்டபாணி (22) மற்றும் சிலரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

மேற்கண்ட வழக்குகளில் கைதான 2பேரையும் காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 7 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 13 பேர் உட்பட 107பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory