» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி : ஆட்சியர் தகவல்!

சனி 7, செப்டம்பர் 2024 4:51:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் ஆகியோர்களுக்கு போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். 

இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் உணவு, ஊட்டச்சத்து,உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் இரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்திடவும் பாரம்பரிய உணவு வகைளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது.

அதனடிப்படையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 403 ஊராட்சிகளில் 09.09.2024 முதல் 12.09.2024 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி வெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.300/-ம், இரண்டாம் பரிசாக ரூ.200/-ம், மூன்றாம் பரிசாக ரூ.100/-ம் வழங்கப்படவுள்ளது.

வட்டார அளவில் 12 வட்டாரங்களில் 16.09.2024 முதல் 20.09.2024 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500/-ம், இரண்டாம் பரிசாக ரூ.2,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.1,500/-ம் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும், மாவட்ட அளவில் 25.09.2024 அன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.4,000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.3,000/-ம் வழங்கப்படும்.

மேலும் 2 நபருக்கு ரூ.2,500/- வீதம் சிறப்பு பரிசாக ரூ.5,000/-மும், 3 நபருக்கு ஆறுதல் பரிசாக ரூ.2,000/- வீதம் ரூ.6,000/-மும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். கிராம ஊராட்சிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் வட்டார அளவில் நடைபெறும் ஊட்டச்சத்து போட்டிகளிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையோர் ஆவார்கள்.

மேற்படி, கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory