» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

வெள்ளி 26, ஜூலை 2024 9:26:34 AM (IST)



தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க 2024-25 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க 2024-25 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ரோட்டரி அரங்கில் நடந்தது. சங்க தலைவர் முஹம்மது இப்ராஹிம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். பைசர் இறைவணக்கம் வாசித்தார். லிங்கசுதன் நான்குவழி சோதனை வாசித்தார். சங்க தலைவர் முஹம்மது இப்ராஹிம் வரவேற்றுப் பேசினார். செயலாளர் விக்னேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.

​செந்தில் ஆறுமுகம் புதிய தலைவரை அறிமுகம் செய்து பேசினார். தொடர்ந்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான்கான் சலீம் 2024-25 ஆண்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஷ்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்டரிடம் சங்கத்தின் பட்டய சான்றிதழை வழங்கினார். பின்னர் தலைவர் விக்னேஷ் ஏற்புரை வழங்கி தனது நிர்வாக குழுவை அறிவித்தார்.

​பின்னர் சேவைதிட்டங்களாக பள்ளி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க இதழ் கோரல் வாய்ஸ் வெளியிடப்பட்டது. புதிய உறுப்பினர்கள் ரோட்டரியில் இணைக்கப்பட்டனர். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிக்கு மதிய உணவு உண்பதற்கு தேவையான சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்கப்பட்டது. மாநகரில் மரங்களை நட்டி பராமரிக்கும் குழுக்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு விருத்தினரை கிருஷ்ணா சங்கர் அறிமுகம் செய்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியின் சிறப்பு விருத்தினர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான்கான் சலீம் சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். கௌரவ விருந்தினர்கள் ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் குமணன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பொது மேலாளர் அசோக்குமார், உதவி ஆளுநர் கண்ணன் ஆகியோர் புதிய நிர்வாக குழுவை வாழ்த்தி பேசினார்கள். ​செயலாளர் விக்டர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சங்க உறுப்பினர்கள் இணைந்து செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory