» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமய மாதா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : எஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

வியாழன் 25, ஜூலை 2024 5:23:00 PM (IST)



தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நாளை (26.07.2024)  கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 05.08.2024 அன்று வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (25.07.2024) தூய பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள ஸ்னோ மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் நடைபெற்றது.

இத்திருவிழாவை முன்னிட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் இத்திருவிழாவில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினர்.

இந்த திருவிழாவில் திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ரகசியமாக கண்காணிக்க ஆண் மற்றும் பெண் போலீசார் சாதாரண உடையில் பொதுமக்களோடு மக்களாக கலந்து ஆங்காங்கே தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆங்காங்கே சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  ஆறுமுகம், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி உட்கோட்டம்  லோகேஸ்வரன், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு  செந்தில் இளந்திரையன், உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory