» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

வியாழன் 25, ஜூலை 2024 10:39:50 AM (IST)

தூத்துக்குடியில் இன்றும் நாளையும், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் பணிமய மாதா ஆலயத் திருவிழா நாளை (26ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5 தேதி வரை நடைபெறுகிறது. இன்று 25ஆம் தேதி இன்று மாலை  கொடி பவனி நடைபெறுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நாளை 26 ஆம் தேதியும் கடலுக்கு செல்ல மாட்டார்கள். 

மீண்டும் நாளை மறுநாள் (27ஆம் தேதி) முதல் கடலுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 272 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.  அதே வேளையில், வெள்ளப்பட்டி, சிலுவைபட்டி, ராஜபாளையம், புதிய துறைமுகம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory