» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திர பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதிவை தடுக்க புதிய நடைமுறை அமல்

செவ்வாய் 23, ஜூலை 2024 8:14:27 AM (IST)

பத்திர பதிவு துறையில் போலி ஆவணங்கள் பதிவை தடுக்க புதிய நடைமுறையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை பதிவுத்துறை தலைவர், அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் "தமிழ்நாடு ஆவண எழுத்தர் உரிம விதிகள் 1982 விதி 15-ல் பத்திரபதிவுக்கு வரும் பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக ஒவ்வொரு பதிவு அலுவலகத்திலும் அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள ஆவண எழுத்தர்களின் பட்டியல் அறிவிப்ப பலகையில் வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் ஆவண எழுத்தர்களின் பட்டியல் பல பதிவு அலுவலகங்களில் முறையாக வைக்கப்படுவது இல்லை. அறிவிப்பு பலகையில் உள்ள ஆவண எழுத்தர்களின் விவரங்களும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.

ஆகையால் போலி ஆவணங்கள் பதிவு தொடர்பான விசாரணையின் இறுதியில் போலி ஆவணம் என்று முடிவு செய்யும்போது, அதனை தயாரித்தவர் யார் என்ற விவரத்தை சரியாக அறியவும், எழுதி தந்தவருக்கும், இந்த போலி ஆவணம் தயாரிப்பில் ஏதாவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால், ஆவணத்தின் இறுதி பக்கத்தில் ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வக்கீலின் பெயர், உரிம எண், கட்டாயம் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். 

அதன் அருகில் அவருடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை ஸ்கேன் செய்யப்பட்ட பிம்பம் அதிலேயே அச்சுப்பிரதியில் வரும் வகையில் அச்சுப்பிரதி எடுத்து அதன் அருகில் கையொப்பம் இடவேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக பதிவுஅலுவலகங்களில், அந்த அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள ஆவண எழுத்தர்களின் விவரங்களை, அதாவது ஆவண எழுத்தர் பெயர், உரிம எண், செல்போன் எண் அடங்கிய விவரங்களை ஆவண எழுத்தர்களின் புகைப்படத்துடன் இணைத்து பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory