» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாற்றம்: புதிய ஆட்சியராக லட்சுமிபதி நியமனம்!

புதன் 11, அக்டோபர் 2023 9:39:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக வந்த செந்தில்ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லக்‌ஷ்மிபதி நியமனம்
  • கரூர் மாவட்ட ஆட்சியராக தங்கவேல் ஐஏஎஸ் நியமனம்
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரபுஷங்கர் நியமனம்
  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக சுந்தரவல்லி ஐஏஎஸ் நியமனம்
  • தொழில்நுட்ப கல்வி ஆணையராக வீர ராகவ ராவ் ஐஏஎஸ் நியமனம்
  • தூத்துக்குடி ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ் சிப்காட் மேலாண் இயக்குநராக நியமனம்
  • திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்.
  • விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக ஸ்ருதன்சய் நாராயணன் ஐஏஎஸ் நியமனம்
  • ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory