» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 22, செப்டம்பர் 2023 8:33:24 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை அறிக்கை கிடைத்துள்ளதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பி்ன்னர் அதன் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனதுபுகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.மாலாஆகியோர் அடங்கிய அமர்வில்விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையம் தரப்பில் தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்துள்ளோம் என்றும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுஅளித்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது வழக்கை முடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும் அவரது பரிந்துரையின் அடிப்படையில் எந்தநடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இதில் பல்வேறு சட்ட விதிமீறல்கள் உள்ளன என குற்றம் சாட்டினார்.

அப்போது ஆணையம் தரப்பில், புதிதாக ஆதாரங்கள் ஏதும்இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம். ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என வாதிடப்பட்டது.

பின்னர் சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வுசெய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை, புலன்விசாரணை பிரிவின் அறிக்கைஅரசுக்கு கிடைத்துள்ளதா, ஒருவேளை அறிக்கை கிடைத்துஇருந்தால் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.


மக்கள் கருத்து

அப்படியாSep 23, 2023 - 08:54:26 AM | Posted IP 162.1*****

சுட்டவன் சந்தோசமாக இருக்கான்

இன்னும்Sep 22, 2023 - 10:32:29 PM | Posted IP 172.7*****

பத்து அல்லது பதினைந்து வருடங்களில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory