» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!
புதன் 14, ஜூன் 2023 9:54:50 AM (IST)
தூத்துக்குடியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோடை விடுமுறைக்குப் பின்னர் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு, மேலும் தள்ளிவைக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்றே அனைத்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இலவச உபகரணங்களையும் இன்றே வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதனால், பாடப்புத்தகங்களை வழங்க அனைத்து பள்ளி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளன.