» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோவை வழிமறித்து பெண் வெட்டிக் கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
திங்கள் 10, ஏப்ரல் 2023 10:16:21 AM (IST)

கோவில்பட்டி அருகே ஆட்டோவில் சென்ற பெண்ணை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகராஜ் (33), இவர் நேற்றிரவு தனது ஆட்டோவில் கட்டாலங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி வெள்ளைத்துரைச்சி(30) என்பரை வானரமுட்டியில் இருந்து கட்டாலங்குளத்திற்கு சவாரி ஏற்றிச் சென்றுள்ளார். வானரமுட்டி - கட்டராங்குளம் இடையே காளம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து ஆட்டோவில் இருந்த பெண்ணை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயன்ற ஆட்டோ டிரைவர் சண்முகராஜை அந்த கும்பல் தலையில் தாக்கியதில் மயக்கம் அடைந்ததாக தெரிகிறது. மயக்கம் தெளிந்த பிறகு ஆட்டோ டிரைவர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த ஆட்டோ டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தருவைக்குளம் கடற்கரை பகுதியில் எஸ்பி ஆய்வு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:41:37 PM (IST)

வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டண விலக்கு: எம்பவர் இந்தியா கோரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:03:57 PM (IST)

நாசரேத்தில் ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ பிறந்த நாள் விழா!
வியாழன் 3, ஏப்ரல் 2025 7:56:35 PM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:51:55 PM (IST)

முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் நடவடிக்கை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:03:31 PM (IST)

பெண் பயணிகள் பாதுகாப்பு வாட்ஸ்அப் குழு: தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு
வியாழன் 3, ஏப்ரல் 2025 4:56:29 PM (IST)

ஆண்டApr 10, 2023 - 11:59:26 AM | Posted IP 162.1*****