தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மணிகண்டன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் குணா (30).நண்பர்களான இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியின் வீட்டுக்குள் புகுந்து ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி, மணிகண்டன், குணா ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

