தூத்துக்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் 157-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என திமுக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் கூடிய அவரது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குரூஸ் பர்னாந்தின் 157-வது பிறந்தநாளான இன்று (நவ. 15) அவரது திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநகரத் துணைச் செயலாளர் பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சாரதி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, பாலகுருசாமி, டென்சிங், லியோ ஜான்சன், ரவீந்திரன், பொன்னுச்சாமி, செல்வமாரீஸ்வரன், சுரேஷ் மகாராஜா, கங்காராஜேஷ், காளித்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், காசிராஜன், கவுன்சிலர்கள் பவாணி, ரெக்ஸ்லின், விஜயகுமார், சரவணகுமார், இசக்கிராஜா, தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், மார்ஷல், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் முரளிதரன், எஸ்.ஜே. சுமன், ஆடிட்டர் சிவராமன், முத்துராஜா, ஜாக்சன், மணி, ஆல்பர்ட் உள்படப் பலர் திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

