தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பழனியப்பபுரம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் பட்டுத்துரை (27). இவருக்கும் சந்தியா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 1¾ வயதில் பெண் குழந்தை உள்ளது.

பட்டுத்துரை முறையாக வேலைக்குச் செல்லாததால் அவரது மனைவி சந்தியா கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் சந்தியா கோபித்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த சாத்தான்குளம் போலீசார், பட்டுத்துரையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.