ருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவில்பட்டி 'சௌபாக்யா டவர்' கூட்டரங்கில் தலைவர் க. தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் இ. பெஞ்சமின் பிராங்கிளின், எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் எம். ரவிக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை வழக்கறிஞர் எஸ். வாஞ்சிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 'இந்திய அரசியலமைப்புச் சட்டமும், இன்றைய சவால்களும்' என்ற தலைப்பில் விரிவாக உரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில துணைத் தலைவர் அபிராமி பி. முருகன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் பழனிக்குமார், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஜெயா ஜனார்த்தனன், ராமலட்சுமி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் சுபேதார் கே. கருப்பசாமி, செண்பகராஜ், மோகன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத் தலைவர் செல்லத்துரை என்ற செல்வம், காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளர் துரைராஜ், ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன், மகேந்திரன், பழனிச்சாமி, பகத்சிங் ரத்ததான கழக நிர்வாகிகள் மா. காளிதாஸ், லட்சுமணன், தியாகி விஸ்வநாத தாஸ் பேரவை சங்கர், வழக்கறிஞர்கள் முத்துக்குமார், மகேஷ் குமார், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சக்திவேல் முருகன், அக்ரி சுரேஷ் குமார், சுதாகர் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

