தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு, வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கும் வரிசைமுறைப் பயன்பாட்டிற்கும் ஏதுவாக சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பேரிகார்டுகளை டிசிடபிள்யூ மூத்த செயல் துணைத் தலைவர் சீனிவாசன் கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் அருணாசலம் அவற்றைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நிறுவனச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரகாஷ், சண்முகசுந்தர் உட்படக் கோவில் மற்றும் டிசிடபிள்யூ நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.