நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மேலூர் பங்களா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோவிலில் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமிட்ட சிறுவர், சிறுமியர் கீதா ஜீவனைச் சந்தித்தனர்.
அப்போது, பங்கேற்ற சிறுவர் - சிறுமியரிடம் அவர்களது கல்வி விவரங்களைக் கேட்டறிந்த கீதா ஜீவன், நன்றாகப் படித்துப் பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்டப் பொறியாளர் அணித் தலைவர் பழனி, தகவல் தொழில்நுட்ப அணித் துணை அமைப்பாளர் பிரபு, பகுதிச் செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞரணித் துணை அமைப்பாளர் ரவி, மாமன்ற உறுப்பினர் கண்ணன், வட்டச் செயலாளர்கள் கங்கா ராஜேஷ், கருப்பசாமி, வட்டப் பிரதிநிதி பாஸ்கர், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

