தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாமில் 96 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சிப் பிரிவு 2-க்கு உட்பட்ட 4 மற்றும் 5-ஆவது வார்டு பகுதிகளில் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித் திரியும் 96 சமூக நாய்கள் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சமூக நாய்களிடையே வெறிநோய் பரவுவதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இதுபோன்ற வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்று தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.