டிஎம்பி அறக்கட்டளை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு மற்றும் பெண்களின் ஆரோக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் HPV தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2026 செப்டம்பர் 3 ஆம் தேதி டிஎம்பி அறக்கட்டளை நர்மதா மருத்துவமனையுடன் இணைந்து கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பிற்கான HPV தடுப்பூசி முகாமை நடத்தின. இந்த முகாமின் மூலம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1200 கல்லூரி மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை டிஎம்பி அறக்கட்டளையின் இயக்க தலைவர் அனந்த சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் டிஎம்பி அறக்கட்டளையின் துணைத் தலைவர் டி. இன்பமணி இந்திய மருத்துவ சங்கம் (IMA) – சிவகாசி கிளைத் தலைவர் டாக்டர் ரஸ்மி பிரவீன், மற்றும் நர்மதா மருத்துவமனை மகப்பேறு நிபுணர் டாக்டர் ஜெ. நர்மதா பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டிஎம்பி அறக்கட்டளையின் இயக்கத் தலைவர் அனந்த் சுப்பிரமணியன், கிராமப்புற மாணவிகளுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்க டிஎம்பி அறக்கட்டளை தொடர்ந்து பங்களிக்கும் என்றும் தெரிவித்தார்.

