தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாபா நகரைச் சேர்ந்தவர் மாடசாமி (65). வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், குடும்பத்தைப் பிரிந்து கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் கீழ்தளத்தில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் கழுகுமலையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அவர் தனது வீட்டில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.