தூத்துக்குடி மாவட்டம் முறைப்பநாடு அருகே உள்ள பாக்கபட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த வேல் என்பவரின் மகன் சண்முக சுந்தரம் (47). இவர் கடந்த 28.08.2026 அன்று இரவு மதுபோதையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கியுள்ளார். நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தபோது, எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை மீட்டுத் திருநெல்வேலியில் உள்ள காவேரி மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறைப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

