சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருச்செந்தூரில் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குத் தெற்கு மாவட்ட செயலாளர் TVA. பிரைட்டர் தலைமை தாங்கி வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்செந்தூர் தெற்கு நகரப் பொறுப்பாளர் வினோத், வடக்கு நகரப் பொறுப்பாளர் தாமஸ், மாவட்ட பொருளாளர் சீமான், திருச்செந்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் நீதிபாலன் கார்த்திக், உடன்குடி மேற்கு ஒன்றியச் செயலாளர் விஜயராஜ், ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெப பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஆறுமுகநேரி பேரூர்ச் செயலாளர் நிவாஸ் கண்ணன், உடன்குடி பேரூர்ச் செயலாளர் சசிகுமார், கானம் பேரூர்ச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரேம்குமார், மாவட்டத் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மபத்லால், போக்குவரத்துப் பிரிவு வேல்பாண்டி, தன்னார்வலர் அணிச் செயலாளர் சர்க்கார், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் சரவணன், பீட்டர், வசந்த் வலேரியான், யோகன் அ கட்டார், சாலமோன் உட்படப் பலர் பங்கேற்றனர்.