உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குத் தேசிய அளவில் உயரிய விருது கிடைத்து பெருமை சேர்த்துள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான 'Food Connoisseurs India Awards' விருது வழங்கும் விழாவில் தென்னிந்தியாவின் சிறந்த இனிப்பகம் எனும் விருதைத் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வென்றுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங் கலந்து கொண்டு இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். திருநெல்வேலியின் பாரம்பரியச் சுவைக்கும், பல தலைமுறைகளாக மாறாத அதன் பாரம்பரியத் தயாரிப்பு முறைக்கும் கிடைத்த மகுடமாக இந்த தேசிய விருது அமைந்துள்ளதாக உணவுப் பிரியர்களும் நெல்லை மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

