தூத்துக்குடியில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் 157-வது பிறந்தநாள் விழா மற்றும் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு நற்பணி மன்ற அமைப்பாளர் எட்வின் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றுப் பேசினார். செயலாளர் சசி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பரவர் நல கூட்டமைப்பின் தலைவர் சேசைய்யா வில்லவராயர் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கூத்தங்குழி சூசை அந்தோணி, உவரி அந்தோணிசாமி, உவரி ரைமண்ட் ஆகியோர் கலந்துகொண்டு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பொருளாளர் டெரன்ஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அன்னை பரதநல சங்கத்தைச் சேர்ந்த சேவியர் வாஸ், பாஸ்கர், காஸ்ட்ரோ, ராஜா, போஸ் ரீகன், கன்னியாகுமரி பரவர் நல பேரவை தலைவர் டாக்டர் டங்ஸ்டன், பழையகாயல் பரவர் நல கூட்டமைப்பு தலைவர் பிரேம் சந்திரன், பாளையங்கோட்டை பரவர் நல சங்க தலைவர் அருள்வின், நெய்தல் தொழில் அமைப்பின் தலைவர் பிரின்ஸ் கர்டோசா, சமூகப் போராளி பாத்திமா பாபு, நாட்டுப்படகு சங்க தலைவர் ராஜ், ஒருங்கிணைப்பாளர் ரீகன், தமிழ் மீனவ கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் ரஜினி மகி, பரதவர் அரசியல் எழுச்சி போராளிகள் தலைவர் கணிட், நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சேவியர் சில்வா, வளன், அரவிந்த், ஜெனிஸ் வர்க்கீஸ், ஆனந்த், அலாய், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.