தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானுபன்விளை பகுதியில் சிலர் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி சுனாமி காலனியைச் சேர்ந்த மாணிக்கம் (36), அவரது மனைவி சுமதி (33) மற்றும் வானுபன்விளை பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி (37) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4 கிலோ 435 கிராம் கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.