SIR நடவடிக்கை மூலம் பல லட்சம் வாக்காளர் பெயர்களை நீக்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கரும்பன் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், நிர்வாகிகள் சம்பத், ராஜா, முத்து, புவிராஜ், முத்துமாரி, சிபிஐ நிர்வாகிகள் தனலட்சுமி, ஞானசேகர், கோவில்பட்டி பாபு, எட்டயபுரம் பாலமுருகன், ஞானசேகரன், பலவேசம், பாலசிங்கம், சேகர், மாரிமுத்து, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுந்தர்ராஜ், சகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது SIR நடவடிக்கையை உடனடியாகக் கைவிடக் கோரியும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்து அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.