டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 37 ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்று விளாசிய இஷான் கிஷன் அரைசதம் கடந்து 79 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அந்த அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகினர்.
இறுதியில் இலங்கை அணி 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல் மற்றும் அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தங்கம் வெல்வதற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

