» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேவராஜ் அறக்கட்டளை விரிவுரை
திங்கள் 22, ஜூலை 2024 5:57:27 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் முனைவர் தேவராஜ் அறக்கட்டளை விரிவுரை நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனருமான டாக்டர் எம்.தேவராஜ் அவர்களின் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் இவ்விரிவுரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறக்கட்டளை அமைப்புச் செயலாளர் உதவிப்பேராசிரியர் த.ரவிக்குமார், வரவேற்புரை வழங்கினார்.
முதல்வர் (பொறுப்பு) நீ.நீதிச்செல்வன், தனது தலைமையுரை வழங்கினார். சென்னை வங்காள விரிகுடா திட்டத்தின் இயக்குநர் மற்றும் மீன்வள செயலக வலையமைப்பின் துணைத் தலைவருமான பா.கிருஷ்ணன், "மீன்வள மேலாண்மையின் முன்னேற்றத் தடைகளை உடைத்தல் மற்றும் முன்னோக்குப் பார்வையை உருவாக்குதல்” என்ற தலைப்பில் விரிவுரை வழங்கினார்.
அறக்கட்டளை விரிவவுரையைத் தொடர்ந்து மாணாக்கர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அமைப்பு செயலாளர் உதவிப்பேராசிரியர் உமா மகேஷ்வரி, நன்றி கூறினார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்பு கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வலைத்தளத் தொடர்பு மூலம் கலந்து கொண்டனர்.