» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காசிஸ் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் கல்வி வளர்ச்சி நாள் விழா

திங்கள் 15, ஜூலை 2024 8:41:56 PM (IST)



நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அமைவின் மூலம் நாசரேத் தூய யோவான் மாதிரி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி முதலிய அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டது.கல்வி வளர்ச்சி நாள் விழாவின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் மர்காசிஸ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் நாட்டு நலப் பணி திட்டத்தின் தலைவருமான குணசீலராஜ் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.தூய யோவான் மாதிரி பள்ளியின் தலை மை ஆசிரியை ஷீலா வரவேற்றார்.

ஆசிரியை ஜெசிந்தா தொகுத்து வழங்கினார்.தூய யோவான் ஆசிரி யர் பயிற்சி பள்ளி தாளாளர் ராஜசே கர் ஜெபச்சந்திரன், தூய யோவான் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் லிடியா கிரேஸ் மணி, மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுஜித் செல்வ சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி கருப்பு காந்தி, படிக்காத மேதை, கர்மவீரர்,பாரத ரத்னா, காம ராஜர்,கல்விக்கண் திறந்தவர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தூய யோவான் மாதிரி பள்ளி மாணவர்களின் நடனம், நாடகம், சொற்பொழிவு முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . அறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர் குணசீலராஜ் மற்றும் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி பள்ளி தாளாளர் ராஜசேகர் ஜெபச் சந்திரன் பரிசுகளை வழங்கினார்.

ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. இவ்வி ழாவில் தூய யோவான் மாதிரி பள்ளி மாணவ,மாணவியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை ஜெயந்தி சுபாஷினிநன்றிகூறினார்.முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும் தலைமை யாசிரியர் குணசீலராஜ் மற்றும் தூய யோவான் மாதிரி பள்ளி தலை மையாசிரியை ஷீலா ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெய்சன் சாமு வேல் ஆசிரியர் மேஷாக் மற்றும் தருன் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory