» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
திங்கள் 15, ஜூலை 2024 3:58:58 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு கல்வி வளர்ச்சி தின விழா நடந்தது.
காமராஜரின் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை வகித்தார். கோவில்பட்டி லிபர்டி நிறுவனங்களின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்லபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார். அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் பிறந்த தின விழா சிறப்புரையாற்றினார்.
கலைமாமணி இசை ஆசிரியை அமல புஷ்பம் காமராஜர் பிறந்த தின பாடல்களை பாடினார். இதில் ரோட்டரி சங்க உறுப்பினர் அம்புரோஸ். உதவி தலைமையாசிரியை உஷா ஜோஸ்பின் உள்பட பள்ளி ஆசிரியர்கள்,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிகளை தமிழாசிரியை கெங்கம்மாள் தொகுத்து வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
