» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் மாணவர் சங்கப் பேரவைப் பதவியேற்பு விழா

சனி 6, ஜூலை 2024 4:01:38 PM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் சங்கப் பேரவைப் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

முன்னதாக கல்லூரி ஆலயத்தில் அருட்தந்தை மரிய அரசு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்பின் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் செயலர் ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பர்னான்டோ, துணை முதல்வர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா, மரியின் ஊழியர் சபையின் இல்லத் தலைவி தெரசா மற்றும் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் ஜெனட் ஆகியோர் தலைமை வகித்தனர். 

தூத்துக்குடி மறைமாவட்ட சமூக ஊடக ஒருங்கிணைப்பாளரும், இனிகோ அச்சகம் மற்றும் மாதா தொலைக்காட்சி இவற்றின் இயக்குனருமான அருட்தந்தை கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அர்ப்பணிப்பு இரக்கம் உணர்வுகளை உள்ளடக்கிய நேர்மையான வாழ்வு வாழ வேண்டும் என்று சிறப்புரை வழங்கினார். 

மாணவர் சங்கப் பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியர்கள் பதவி ஏற்றனர். கல்லூரியின் அனைத்து துறைகள் சங்கங்கள் மற்றும் மன்றங்கள் இவற்றின் பிரதிநிதிகள் தங்கள் திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory