» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி!
சனி 6, ஜூலை 2024 9:55:17 AM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் மற்றும் பட்டதாரி அறிவியல் ஆசிரியை ரோஸ்லின் எஸ்தர் ஆகியோர் ரிப்பன் வெட்டி கண் காட்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில், மீண்டும் பயன்படுத் தக்கூடிய தரையிறங்கும் விண் கலன் சோதனையை இஸ்ரோ மூன்றாவது முறையாக வெற்றிக ரமாக நிறைவேற்றிய சாதனையை விளக்கும் வகையில் கண்காட்சி நடக்கப்பட்டது.
மாணவர்கள் பல்வேறு அறிவியல் உபகரணங்களை காட்சிப்படுத்தினர். குறிப்பாக விண்கலன் மாதிரிகள்,பாஸ்கல் விதியின்படி இயங்கும் நீரியல் தூக்கிகள், பலவடிவ எந்திரன் மாதிரிகள், நில அதிர்வு உணர்வு கருவிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் மாண வர்கள் கண்காட்சியை பார்வையி டனர்.
மாணவர்கள் தாங்கள் காட்சிப்படுத்திய உபகரணங்களின் செயல்பாடுகளை விளக்கி கூறினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மாணவர்க ளுக்கு, விண்வெளி ஆராய்ச்சி குறித்தும், இஸ்ரோவின் சமீபத்திய செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.
உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், அறிவியல் ஆசிரியர்கள் ஜென்னிங்ஸ் காமராஜ், ஜெயந்தி சுபாஷினி, சோபியா பொன்ஸ், உடற்கல்வி ஆசிரியர் தனபால், என்.சி.சி. அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், நிர்வாகப் பிரிவு அறிவியல் ஆசிரியர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் பங்குபெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.