» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் சங்கப் பேரவைத் தேர்தல்!
புதன் 3, ஜூலை 2024 5:56:37 PM (IST)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இன்று மாணவர் சங்கப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் பொதுப் பிரிவில் ஏழு மாணவியரும் சுயநிதி பிரிவில் நான்கு மாணவியரும் தேர்தலில் உறுப்பினர்களாகப் போட்டியிட்டனர். மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவி நான்சி விதுலா பிரட் மாணவர் சங்கப் பேரவை தலைவராகவும் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறையைச் சார்ந்த மாணவி ரிஷாலின் மாணவர் சங்கப் பேரவை செயலராகவும் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கிய துறையைச் சார்ந்த மாணவி கிளன்சி மாணவர் சங்கப் பேரவைத் துணைத் தலைவராகவும் பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சுயநிதிப் பிரிவில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவி நித்யஸ்ரீ மாணவர் சங்கப் பேரவைத் தலைவராகவும் மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறையைச் சார்ந்த மாணவி இருதய ஸ்நோயி மாணவர் சங்கப் பேரவைச் செயலராகவும் மூன்றாம் ஆண்டு உளவியல் துறையைச் சார்ந்த மாணவி யேசு அபிநயா மாணவர் சங்கப் பேரவைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் பொதுப் பிரிவில் 1210 மாணவியரும் சுயநிதிப் பிரிவில் 546 மாணவியரும் வாக்களித்தனர்.