» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
செவ்வாய் 2, ஜூலை 2024 8:37:08 PM (IST)

நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜாஸ்மின் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர், சுகாதார ஆய்வாளர் ஞான்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஞானரதி வனிதா வரவேற்றார் வெள்ளமடம், வாலசுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ_ மாணவிகள் சுமார் 320 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கிராம செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இயக்குனர் நந்தகோபால் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
