» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா!

திங்கள் 1, ஜூலை 2024 4:49:27 PM (IST)



நாகலாபுரம் டி.டி.டி.ஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் வட்டம், நாகலாபுரத்தில் அமைந்துள்ள டி.டி.டி.ஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஞானஜோதி ரெஜினாபாய் பணிநிறைவு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்சன் தலைமையில் நடந்தது. டி.என்.டி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் முன்னிலை வகித்தார். 

பாராட்டு விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், ஆட்சிமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், கவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர், நாகலாபுரம் ஊராட்சிமன்றத்தலைவர், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் தெய்வேந்திரன், புதூர் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வக்கனி, ஆற்றங்கரை திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஞானராஜ். மற்றும் சுந்தர் மேலும் பலர் வாழ்த்தி பேசினர். 

தொடர்ந்து பள்ளி ஆட்சிமன்றத் தலைவர் இஸ்ரவேல் ஞானராஜ் ஜெபித்து, ஆசியுரை வழங்கினார்கள். கே.கைலாசபுரம் தாளாளர் டேவிட், தலைமை ஆசிரியர் ஐசக், போப் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.எட்வர்ட் (சாரண, சாரணிய மாவட்ட பொறுப்பாளர்) இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தனராஜ், இப்பள்ளி முன்னாள் தாளாளர் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹெக்டர் அமிர்தராஜ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் ஞானராஜ் சிறப்பாக செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory