» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி!
ஞாயிறு 30, ஜூன் 2024 7:07:42 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தலைமை ஆசிரியர் குணசீலராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் உதவி காவல் ஆய்வாளர் வைகுண்ட தாஸ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சிதம்பர மூர்த்தி, தலைமை காவலர் மணிகண்டேஸ்வரன் மற்றும் காவலர்கள், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் கையில் விழிப்பு ணர்வு பதாகைகள் ஏந்தியும், போதைக்கு அடிமையானால் மரணம் என்பதே காட்டும் வகையில் பாடையை தூக்கியும் , விதவைப் பெண் வேடம் அணிந்தும், போதைப் பொருள் ஒழிப்பு அச்சு பிரதிகளை கொடுத்தும் ஊர் மக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணி பள்ளியில் தொடங்கி நாசரேத் ஊர் பகுதிகளை சுற்றி வந்து முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கிரேஸ் சுதாகர், தலைமை ஆசிரியர் குணசீலராஜ் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல் மற்றும் ரீபைனர் மேஷாக் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
