» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சாலமோன் பள்ளி மாணவர்கள் பதவி ஏற்பு விழா!
சனி 29, ஜூன் 2024 9:47:00 PM (IST)

நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்க ளுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
பதவி ஏற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காவல் நிலைய உதவி ஆய்வாளர் வைகுண்டதாஸ் தலைமை வகித்தா.தலைமை காவலர் வேல் பாண்டி முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் வரவேற்று பேசினார். . பள்ளி தலைவர் எலிசபெத் விழா வினை தொகுத்து வழங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் மாணவர்களுக்கான பதவி பேட்ஜை அணிவித்தார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் கொடி அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார்.
கீழ்க்கண்ட மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பள்ளி மாணவாகளின் தலைவர், பள்ளி மாணவர்களின் உதவி தலைவர், தலைமை மாணவன், தலைமை மாணவி, கல்வி அமைச்சர், உதவி கல்வி அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், உதவி விளையாட்டு துறை அமைச்சர், ஒழுங்குமுறை அமைச்சர், உதவி ஒழுங்குமுறை அமைச்சர், கலாச்சார அமைச்சர், உதவி கலாச்சார அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், உதவி சுற்றுசூழல் அமைச்சர், சிவப்பு அணி தலைவர், சிவப்பு அணி உதவி தலைவர், ஊதா அணி தலைவர், ஊதா அணி உதவி தலைவர், பச்சை அணி தலைவர், பச்சை அணி உதவி தலைவர், மஞ்சள் அணி தலைவர், மஞ்சள் அணி உதவி தலைவர் ஆகிய மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இறுதியில் உதவி ஆய்வாளர் வைகுண்டதாஸ், தலைமை காவலர் வேல்பாண்டி மற்றும் மாணவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் விதமாக மரகன்றுகளை நட்டு வைத்து விழாவை சிறப்பித் தனர்.முடிவில் உதவி முதல்வர் மாரிதங்கம் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
