» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழக அரசுத்துறையில் புதிய வேலை வாய்ப்புகள் : ஆக.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:45:46 PM (IST)
தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறை மற்றம் குடிசை மாற்று வாரிய பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறை மற்றம் குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவதற்கான தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Vocational Counsellor (Medical Department)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,33,100
தகுதி: Medical and Psychiatric Social Work பாடத்தை முக்கிய பாடமாக் கொண்டு Social Work பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,33,100
பதவி: Community Officer
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,30,800
தகுதி: Social Work பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சமூக சேவை சார்ந்த பணியில் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி பொது பிரிவினர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.11.2022 மற்றும் 13.11.2022
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/VOC%20&%20CO%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.