» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
பாரத ஸ்டேட் வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்: தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்!
வியாழன் 19, டிசம்பர் 2024 4:42:23 PM (IST)
பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு (SBI Clerk Notification 2024) தற்போது வெளியாகியுள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு (SBI Clerk Notification 2024) தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியின் விவரங்கள்: வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் (SBI Junior Associate)
மொத்தம் காலிப்பணியிடங்கள்: 13,735
தமிழகத்தின் காலிப்பணியிடங்கள்: 336
புதுச்சேரி: 4
விண்ணப்பிக்க தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.04.2024 தேதியின்படி, குறைந்த பட்ச வயது; 20 ஆண்டுகள், அதிக பட்ச வயது: 28 ஆண்டுகள்
வயது தளர்வு ;
ஒபிசி(OBC)- 3 ஆண்டுகள்
எஸ்சி/எஸ்டி (SC/ST)- 5 ஆண்டுகள்
கல்வித்தகுதி;
31.12.2024 தேதியின்படி தரவுகள்படி, விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree)முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை;
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு
முதல்நிலை தேர்வு ஆன்லைன் வழியாக 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வு ஆன்லைன் வழியில் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்வு நடைபெறும்.
சம்பள விவரம்: ரூ.24,050 - ரூ. 64,480
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணயதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்; ரூ.750 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி. (SC/ST) மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 17.12.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.01.2024
முதல்நிலை தேர்வு:பிப்ரவரி 2025
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)

ரயில்வே பள்ளிகளில் 1036 பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 18, ஜனவரி 2025 12:26:18 PM (IST)

பழனி கோவிலில் 296 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 9, டிசம்பர் 2024 5:06:58 PM (IST)

ரயில்வேயில் 5647 அப்ரன்டிஸ்கள்: டிச.3க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 30, நவம்பர் 2024 5:15:52 PM (IST)

தட்டச்சர்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 27, நவம்பர் 2024 10:33:34 AM (IST)
