» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

சனி 23, நவம்பர் 2024 9:13:16 PM (IST)

திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க நவ.25க்குள் சுயவிவரக் குறிப்பு விவரங்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து, அவர்களை சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2008 இல் அமைக்கப்பட்டது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்டு திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளதால் அதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் விருப்பப்படும் திருநங்கைகளின் சுயவிவரக் குறிப்பு விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து 25.11.2024 காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம் தூத்துக்குடி சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory