» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ரயில்வேயில் 5647 அப்ரன்டிஸ்கள்: டிச.3க்குள் விண்ணப்பிக்கலாம்!

சனி 30, நவம்பர் 2024 5:15:52 PM (IST)

ரயில்வேயில் 5647 அப்ரன்டிஸ்கள் பயிற்சிக்கு டிச.3க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 5647.

வயது வரம்பு: 03.12.2024 அன்று 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் பிரிவுக்கு அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 படித்திருக்க வேண்டும்.

பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: Electrician/Fitter/Plumber/Painter/Welder (Gas & Electric)/ Diesel Mechanic/Machinist/Turner/Carpenter/Gas Cutter/Pipe Fitter/A/c & Refrigeration/Surveyor/Health Inspector/COPA/Lineman/Lab Technician/ Sanitary Inspector/Mason/Draughtsman/CAD-CAM Operator cum Programmer. ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

கட்டணம்: ரூ. 100/- மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.nfr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.12.2024.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory