» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தட்டச்சர்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 27, நவம்பர் 2024 10:33:34 AM (IST)
தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சர்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் தட்டச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன.
இந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில், சிறப்பு போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு திங்கள்கிழமை (நவ.25) முதல் விண்ணப்பிக்கலாம். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் (றறற.வnpளஉ.பழஎ.in) வழியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 24. அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதியன்று தேர்வு நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.