» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வரிசையில் நின்ற நடிகர் அஜித்குமார்!

வியாழன் 23, ஏப்ரல் 2026 11:20:49 AM (IST)



தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கே நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வருகை தந்தார். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சரியாக 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் வாக்காளராக அவர் தனது ஜனநாயகக் கடமையைச் செய்து முடித்தார். வாக்களித்த பின் தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைச் செய்தியாளர்களுக்குக் காட்டிய அவர், யாரிடமும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory