» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம், கேரளத்தில் வடகிழக்குப் பருவ மழை முடிவுக்கு வந்தது : வானிலை மையம் அறிவிப்பு

திங்கள் 27, ஜனவரி 2025 12:20:14 PM (IST)

தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து வடகிழக்குப் பருவமழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ., மழை பெய்தது. இது, 2023ம் ஆண்டைவிட, 15 சதவீதம் அதிகம். வடகிழக்கு பருவமழை காலத்தில், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களில், இயல்பைவிட மிக அதிகமாக, 59 சதவீதத்துக்கு மேல் மழை பதிவாகி இருந்தது. இந்த முறை தென் மாவட்டங்களில் அதிகமான மழை கொட்டி தீர்த்தது.

ஆண்டுதோறும் அக்டோபர் 3வது வாரம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்குப் பருவமழை காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை நீடித்து வந்தது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 100 நாட்கள் மேலாக மழை பெய்த நிலையில், இயல்பை விட 33% அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory