» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதாக புகார்: ஆட்சியர் திடீர் ஆய்வு

புதன் 29, ஜனவரி 2025 5:02:27 PM (IST)



குமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் ஓடும் வாகனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட சித்திரங்கோடு பகுதியில் உள்ள மின்னணு எடை மேடை நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (29.01.2025) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- "கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி செல்வதாகவும், குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இவற்றை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், தனியார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் வேர்க்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட சித்திரங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு எடை மேடை நிலையம் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதி வழியாக செல்லும் கனரக வாகனங்களை ஆய்வு செய்து, அவர்களிடம் தகுந்த விளக்கம் கேட்கப்பட்டது. அரசால் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும், இந்த விதிமுறைகளை மீறும் கனரக வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரும் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நிர்ணயித்த நேரத்தை தவிர மற்ற நேரத்தில் கனிம வாகனங்கள் செயல்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory